போலி பாசம் தமிழுக்கு… பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

By Soundarya on ஆனி 24, 2025

Spread the love

2014 -15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டிற்கு ரூபாய் 2,533 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிந்த மற்ற ஐந்து செம்மொழிகளுக்கு வருடத்திற்கு வெறும் 13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது RTI மூலமாக அம்பலம் ஆகியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “சமஸ்கிருதத்திற்கு மட்டும் கோடிகளை ஒதுக்கி உள்ள ஒன்றிய அரசு, தென்னிந்திய மொழிகளுக்கு ஒன்றும் ஒதுக்கவில்லை. போலி பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு. வெறும் முதலை கண்ணீர் தான்” என்று கூறியுள்ளார்.