Breaking: விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விதிமீறல்… 53 பேர் மீது வழக்குப்பதிவு..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக சென்னையில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் அனுமதியின்றி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளக்ஸ் போர்டு வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் மீது 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.