பெரும் பரபரப்பு..! விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் TVK நிர்வாகிகள் பட்டாக்கத்தியுடன் மோதல்..6 பேர் படுகாயம்..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

நேற்று நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாடி வந்தார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூரில்  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அந்த கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் பட்டாக்கத்தோடு மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இப்படி ஒருவருக்கொருவர் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.