பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். பாம்புக்கு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவை அதிக விஷம் கொண்டவை என்பதால் பாம்புக்கு அனைவரும் பயந்து நடுங்குகின்றன. ஆனால் பாம்புகளை நாம் எந்த தொந்தரவும் செய்யும் வரை அவை நம்மை எதுவும் செய்யாது. அப்படி இருந்தாலும் பாம்பு என்றால் அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் தான் வரும். பெரும்பாலும் பாம்புகள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழும். ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அளிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது. இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காண முடிகிறது.
இப்படியான நிலையில் பெண்கள் பயணிக்கும் டெல்லி மெட்ரோ ரயிலில் பாம்பு புகுந்ததாக காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையான விஷயம் அல்ல. ரயிலில் இருந்த பயணிகள் பயந்து அலறியதால் மெட்ரோ நிலையத்தில் ரயில் காலி செய்யப்பட்டு முழுமையான ஆய்வுக்காக டெப்போவிற்கு அனுப்பப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட போது அங்கிருந்து ஒரு சிறிய பல்லி கண்டுபிடிக்கப்பட்டதே தவிர பாம்பு எதுவும் காணப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாம்பு புகுந்ததாக பெண்கள் அலறி துடித்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
