மனைவியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த தொழிலாளி.. குடும்பத் தகராறில் வந்த விபரீதம்.. பதற வைக்கும் சம்பவம்..!

By Nanthini on ஆனி 22, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் என்ற 60 வயது கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தான் கஸ்தூரி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்றைய இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த நாகேந்திரன் வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து கஸ்தூரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் கஸ்தூரி அலறி துடித்தார்.

கஸ்தூரி மீது ஊற்றிய பெற்றோர் நாகேந்திரன் மீது பட்டது. இதனால் அவர் மீதும் தீப்பற்றிய நிலையில் உடனே அவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிரோடு கஸ்தூரி கொடுக்கப்பட்டதை அறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் கஸ்தூரி உடல் கருகி பிணமாக கிடந்தார். உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நாகேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.