விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஆரம்பமாகிவிட்டது. ஐந்தாவது சீசனில் பிரியங்கா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வழக்கம் போல இருக்கும் புகழ், சுனிதா, ரக்ஷன் இவர்களை தவிர்த்து மற்ற பிரபலங்கள் களமிறங்கி உள்ளார்கள். பிக் பாஸ் சௌந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின்குமார் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த வாரம் குக்குகளின் கவலையான வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதன்படி சீரியல் நடிகை ஷபானா தன்னுடைய கணவர் ஆரியன் தன்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும், எனக்கு பயம் இல்லை. அவர் என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். எனக்கு நிறைய ஆசைகள் இருக்கிறது. அவர் இருக்கும் தைரியத்தில் தான் இதை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஆரியன் ஷபானா தான் என்னுடைய வாழ்க்கை. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆரியன் யார்? என்று எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஷபானாவுக்கு ஆரியன் போன்ற ஒரு கணவர் கிடைத்தது வரம் என்று இருவரையும் நடுவர்கள் எழுந்து பாராட்டியுள்ளார்கள். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
