உத்திரபிரதேசம் மாநிலம் ராம்கூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சஹீல். இவருக்கு திருமணம் ஆகி 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதனையடுத்து இவருடைய மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண்தேடியுள்ளார் சஹீல். அப்படி ஒரு இடத்தில் பெண் பார்த்துள்ளார். பின்பு தொடர்ந்து சஹீல் தன்னுடைய மகனுக்கு பெண் பார்த்து முடிவு செய்த அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது மகனுக்காக பார்த்து வைத்த அந்த பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி ஃபோனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய மகனுக்காக பார்த்து வைத்திருந்த அந்த பெண்ணை வீட்டை விட்டு கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கிப்போயுள்ளார்கள். இதுகுறித்து திருமணம் செய்துகொள்ள இருந்த சஹீல் மகன் கூறுகையில், என்னுடைய பாட்டி மற்றும் தாத்தாவும் என்னுடைய தந்தையின் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 2 லட்சம் மற்றும் தங்கத்தோடு என்னுடைய தந்தை வீட்டை விட்டு ஓடி சென்று எனக்கு பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்று வேதனையோடு கூறியுள்ளார்.
