நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான படம் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. குபேரா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது என்றும், சேகர் கம்முலா எழுதிய இந்த கதைக்கு எப்படி கிளைமாக்ஸ் அமையும் என்பது பதட்டமாக இருந்தது. ஏனென்றால் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பி விடும் ரிஸ்க் இருந்தது. ஆனால் அவர் கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படம் உங்களோடு இதயத்தை இடித்து நீடித்து நிற்கும் என்றும் பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாள் உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
