கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் குமார் என்பவர். இவருடைய மனைவி சித்தம்மா. இந்த தம்பதிக்கு அக்பினா(8), அவணி(6) என்ற இரண்டு மகள்களும் ஆர்யா என்ற நான்கு வயது மகனும் இருந்தனர். இப்படியான நிலையில் தம்பதி ஆடு மேய்ப்பதற்காக பல்லாரி மாவட்டம் குறுகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்திற்கு சென்று இருந்த நிலையில் ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது ஆடுகளை மேய்க்கும் வேளையில் ஈடுபட்டனர். இதற்காக தம்பதியினர் அந்த கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவியிடையே தவறாக ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த சித்தம்மா தன்னுடைய குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பிறகு அவர் அங்குள்ள பண்ணை குட்டையில் மூன்று குழந்தைகளையும் வீசி கொன்றுவிட்டு தானும் உதித்து தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூன்று குழந்தைகளின் உடல்களையும் தாயின் உடலையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு மூன்று குழந்தைகளை குட்டையில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
