“நான் யாரு வம்புக்கும் போகலையேடா” ரோட்டுல சிவனேனு போனவரை இப்படி சாச்சிட்டியே… ஆடு செய்த சேட்டையை பாருங்க..!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் சேட்டைகள் என பலதரப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவை மக்களை சிரிக்க வைப்பதுடன் ஒரு சில வீடியோக்கள் சிந்திக்கவும் வைக்கிறது. அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தன்னுடைய வேலை உண்டு தான் உண்டு என்ற நபர் ஒருவர் அமைதியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் மீது ஆடு திடீரென்று முட்டுகிறது. இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அந்த நபர் ஏதோ ஒன்று நினைத்துக் கொண்டு மெதுவாக சாலை நடந்து கொண்டிருக்கிறார் . ஆனால் எதிர்பாராத விதமாக ஓரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு பாய்ந்து அவரை தாக்கியதில் தரையில் கீழே விழுந்துள்ளார்.  இந்த வீடியோவை ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் பார்ப்பவர்களை சிரிப்பூட்டும் விதமாக இருக்கிறது. இதை பார்த்த இணையவாசிகளோ “இது பழைய பகை போல தெரிகிறது” என்றாலும் ஆடு அவரை குறி வைத்தது போல தான் இருந்தது என்று நகைச்சுவையாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.