கர்நாடகவைச் சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவருடைய கணவர் திருமண விழா அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய சொந்த ஊர் பீகார். இந்த தம்பதிக்கு அனீஸ் குமார் என்ற பத்து மாத குழந்தை இருந்துள்ளது. குழந்தையின் தந்தை புகைபிடிப்பது வழக்கம். இதனால் அவ்வப்போது பீடியை குடித்துவிட்டு வீட்டிற்குள் போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். அதுபோல சம்பவத்தன்றும் புகைத்து விட்டு பீடி துண்டை வீட்டில் போட்டு இருக்கிறார். அதை அவருடைய 10 மாத குழந்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது. இதில் தொண்டையில் பீடி சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் கணவர் மீது குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். அதில், என்னுடைய கணவர் புகைத்து விட்டு பீடி துண்டை வீட்டில் போட வேண்டாம் என்று சொன்னேன். இருந்தாலும் அவர் அலட்சியமாக அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே வீசி வந்தார். சம்பவத்தன்றும் அப்படி வீசியதால் என்னுடைய குழந்தை அதை எடுத்து விழுங்கி விட்டது. இதனால் தற்போது என்னுடைய குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
