கஷ்டப்பட்டு வளர்த்த பொண்ணு.. 2 குழந்தைகளோட ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. கண்கலங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!

By Nanthini on ஆனி 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல தேவைகளை கொண்டவர் தான் லஷ்மி ராமகிருஷ்ணன். இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. சிலர் தங்களுடைய குடும்ப பிரச்சனைகளை இந்த நிகழ்ச்சியில் வந்து சொல்லி இருந்தனர். ஆனால் அடுத்தவர்களின் குடும்ப கஷ்டத்தை வைத்து இவர்கள் டிஆர்பிக்காக பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என சில வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

நேற்று கூட நான் அவ்வளவு அழுதேன்.. இப்படி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல! லட்சுமி  ராமகிருஷ்ணன் வருத்தம் | Lakshmy Ramakrishnan Joins Cook With Comali & Opens  Up ...

   

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது தன்னுடைய வழக்கமான பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். இப்படியான நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் இதற்கு முன்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நான் நினைத்தேன். அந்த நிகழ்ச்சியில் எங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு தற்போது வரை நாங்கள் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கின்றோம். அதனைப் போல இப்போது நான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர்.

   

விஜய் டிவியோடு பிரச்சனை! குக் வித் கோமாளி போக காரணம் இதுதான்! லட்சுமி  ராமகிருஷ்ணன் ஓபன் | Lakshmy Ramakrishnan Clarifies Her Participation in  Cook With Comali Amidst Past Issues ...

 

அந்த குடும்பத்தில் இருக்கும் ஆணின் தலை பெரிதாக இருந்தது. அவருடைய கண்கள் கையெல்லாம் ஒட்டிப் போயிருந்தன. ஆனால் அவர் கஷ்டப்பட்டு தற்போதும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து தன்னுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. மூன்று குழந்தைகளும் அப்பாவை போலவே பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதனைப் போலவே இன்னொரு குடும்பத்திலிருந்தும் வந்திருந்தனர். அதில் ஒரு பெண் தன்னுடைய மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு இப்போது கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. அம்மாவும் குழந்தைகளும் ரயில் முன்பு விழுந்துட்டாங்க. இதனைப் பார்த்த பெண்ணின் அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அவங்க கதையை சொல்லும்போது என்னால தாங்கிக்கவே முடியல. அதைக் கேட்டு நான் நேற்று கூட ரொம்ப அழுதுகிட்டே இருந்தேன். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அந்த பெண்ணை தள்ளியது யார்? அனைத்தையும் விசாரித்து சம்பவத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் எமோஷனலாக பேசியுள்ளார்.