நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து சிவமயம், அரசி மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களிலும் இவ்வாறு நடித்திருந்தார்.

தமிழை விட தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் தர்பார் படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். கடந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த “35 சின்ன விஷயம் இல்ல” என்ற படத்தில் நடித்திருந்தார். Chinna Katha Kaadu படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தெலங்கானாவில் முதல்முறையாக திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ‘35 இதி சின்ன கத காது’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக நிவேதா தாமஸின் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
