அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு வந்ததாகவும் ஆனால் அழைப்பில் யாரும் பேசவில்லை என்றும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் 5 நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேருமே உயிரிலிருந்து உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படியான நிலையில் விபத்துக்குள்ளாகும் முன்பு அவசர அழைப்பு வந்ததாகவும் ஆனால் யாரும் பேசவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விமானம் அல்லது கப்பலாபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில் அதனை இயக்குபவரால் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞை தான் மே டே கால். பிரஞ்சு மொழியில் இருந்து அதாவது மெய்டர் என்றால் உதவி செய்யுங்கள் என்று அர்த்தம், இந்த வார்த்தை தான் மே டே கால் என உலகம் முழுவதும் அவசர உதவிக்கான அழைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்புபெட்டி கிடைத்தால் மட்டுமே கடைசி நேரத்தில் நடந்தது தெரியவரும் என கூறப்படுகிறது.
