இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு எடுத்து சென்ற நிலையில் அவரால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான வீரராக செயல்படும் இவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக நியமிக்க படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி பாலிவுட்டில் நடித்து வரும் நடிகை எடின் ரோஸ் தற்போது தான் ஸ்ரேயாஸ் ஐயரின் மனைவி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்காதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை காதலிப்பதாகவும் தான் தான் அவருடைய மனைவி என்றும் கூறுகிறார். அதாவது,” என்னுடைய இதயத்தில் ஏற்கனவே நான் அவருடைய மனைவியாக தான் வாழ்ந்து வருகிறேன். அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் என்னுடைய மனதிலும் நினைக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடித்துள்ளது” என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
