Chat GPT என்பது ஒரு சாட்பாட். இந்த chatbot என்பது ஆன்லைன் அரட்டை உரையாடல் சாப்ட்வேர் அப்ளிகேஷன். பெரும்பாலும் இதனை வங்கி சார்ந்த வெப்சைட்டுகளில் அதிகம் பார்க்கலாம். Chat GPT யை சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த “ஓபன் AI” என்ற நிறுவனம் உருவாக்கியது. இதுவும் மற்றொரு தேடு பொறி தானே என்று நாம் அவ்வளவு எளிதாக இதை கடந்து சென்று விட முடியாது. இது அதற்கும் மேலானது. இதனை பயன்படுத்தும் மக்களுடைய எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதனுடைய வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா? என்று உலக மக்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் உலக அளவில் கடினமாக கருதப்படும் JEEAdvanced தேர்வை எழுதிய ChatGPT03 ஆனது 360க்கு 327 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளது. ஒரு வினாவிற்கு பதிலளிக்க ஒன்பது நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. பொறியாளர் அனுஷ்கா அன்வி சமீபத்திய வினாத்தாளை கொடுத்து சோதித்து இருக்கிறார். பல வருடங்களாக பயிற்சி செய்யும் மாணவர்களை போலவே விடைகளை எழுதுவதாக ஆச்சரியமாக கூறியிருக்கிறார்.
