மரியாதைக்கு கூட என்கிட்ட கேக்குறதில்லை.. இளையராஜாவை மறைமுகமாக தாக்கி வைரமுத்து வெளியிட்ட பதிவு..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது பழைய பாடல்களை பயன்படுத்துவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பல சர்ச்சைகளும் அடிக்கடி எழுகின்றது. சமீபத்தில் கூட அஜித்தின் குட் பேட் அக்லி, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய பல படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக காப்புரிமை கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அவருடைய இந்த நடவடிக்கைக்கு ஒரு பக்கம் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வந்து கொண்டிருக்கும் நிலையில் தான் எழுதிய பாடலின் பல்லவிகள், பல படங்களுக்கு தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோபத்துல வந்த வார்த்தை.. இப்படி ஹிட்டாகும்னு நினைக்கல.. வைரமுத்து சொன்ன தகவல் | vairamuthu shared about bombay movie song

   

இதற்காக அந்த குழுவினர் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் மரியாதைக்கு கூட என்னிடம் கேட்கவில்லை என கவிஞர் வைரமுத்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலகம் பட தலைப்புகளாக பயன்படுத்தி உள்ளது. அப்படி எடுத்தவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

   

பொன் மாலைப்பொழுது, சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்த, தங்க மகன் என பல படங்களின் பெயர்கள் என்னுடைய பாடல்களில் இருந்து வந்தது தான். சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை, காணும் இடங்களில் கேட்டதும் இல்லை, செல்வம் பொதுவுடமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என்று நான் மகிழ்வேன். ஏன் என்னை கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகமாகாது, ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா என்று இளையராஜாவை மறைமுகமாக வைரமுத்து பதிவிட்டுள்ளார்.