அம்மாடியோ.. ஒத்த சோப்பு விலை 25,000 ரூபாயா?.. அதுக்கு காரணமே இந்த நடிகை தானாம்..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

சினிமா நடிகை ஒருவர் குளித்த தண்ணீரில் தயாரான வாசனை சோப்பை 25 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து ஆன்லைனில் ரசிகர்கள் போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 1997 ஆம் ஆண்டு வாஷிங்டனில் பிறந்த 2009 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்து ஹாலிவுட் கலக்கி கொண்டிருக்கும் 27 வயதான அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி தான் இந்த 25 ஆயிரம் ரூபாய் சோப்பின் வாசனைக்கு சொந்தக்காரர். தன் மீதும் தன்னுடைய நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்டவர்களின் கோரிக்கையை ஏற்று குளிக்கும் போது தன் உடலில் பட்டு வெளியேறும் நீரை சேகரித்து அதனை பயன்படுத்தி குளிக்கும் சோப் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். இதற்காக பல மாதங்களாக தன்னுடைய குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை நீர் தேக்க தொட்டியில் சேகரித்து அதனை தண்ணீர் லாரி மூலம் சோப் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று உள்ளார்.

Famous Actress Sydney Sweeney Bath Water Soap Became Viral Do You Know How  Much Is It Dr Squatch Collaboration | பிரபல நடிகை குளித்த தண்ணீரை  பயன்படுத்தி... சோப் தயாரிப்பு - விலை எவ்வளவு ...

   

அங்கு சோப்பு உருவாக்கப்படும் போது பயன்படுத்தும் நீருக்குவதில் இவர் குறித்த நீரை பயன்படுத்தியுள்ளனர். Dr. Squatch என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆண்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வெறும் 141 கிராம் மட்டுமே கொண்ட இந்த வாசனை சோப்பின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 650 ரூபாயாக நிர்ணயித்தனர். அதன் பிறகு தொடக்கத்தில் ஓரிரு சோப்புகள் மட்டும் மறு விற்பனைக்கு வந்ததால் அந்த சோப்பை இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக விலை கொடுத்து சிலர் வாங்கினர். இதனால் போட்டி போட்டுக் கொண்டு பலரும் விற்பனைக்கு ஆன்லைனில் பதிவிட்டதால் தற்போது இந்த சோப்பின் விலை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது.