“நெனச்ச கனவு ஒன்னு நிஜமா நடந்திருச்சு” காதலியை கரம்பிடிக்க தேதி குறித்த கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜை இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிலையில் ரிங்கு சிங் சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜின் திருமணமானது நவம்பர் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண தேதி குறித்துள்ளதாகவும், திருமணம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பிரியா சரோஜின் தந்தை  தெரிவித்திருக்கிறார்.

ரிங்கு சிங்கும், பிரியா சரோஜும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். 25 வயதான பிரியா சரோஜ் உத்தர பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி எம்பி ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.