ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகனை இழந்த தந்தை ஒருவருடைய செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வருடங்களில் முதன்முறையாக கோப்பை வென்ற ஆர்சிபி அணியால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். இதனால் கொண்டாட்டங்கள் கலை கட்டியது. வெற்றி கொண்டாட்டத்தின் போது துரதிஷ்டவசமாக கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
The greatest pain a father can endure is to cremate his own child, a grief that defies time, reason, and healing.
Lakshman refuses to leave the grave of his 20 yr old son, Bhumik, who died in the Bengaluru stampede. Buried on a small plot of land in their native village in… pic.twitter.com/qjbBgif6SQ
— THE SKIN DOCTOR (@theskindoctor13) June 7, 2025
இவர்களில் பூமிக் லக்ஷ்மன் என்ற 21 வயது இளைஞர் ஒருவரும் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரை அடக்கம் செய்த இடத்தில் அவருடைய தந்தை அழுது கொண்டிருக்கும் காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது. அவர் “என்னுடைய மகனுக்கு நடந்தது போன்று இனி யாருக்கும் நடக்கக்கூடாது. நான் இங்கே இருந்து விடுகிறேன்” என்று கதறுகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.
