நடிகை மீனா மகளா இது..? ஹீரோயின் ரேஞ்சுக்கு அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் புகைப்படம்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். நடிகை மீனாவின் மகள் நைனிகா சிறுவயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த படம் தான் தெறி. இந்த படத்தில் விஜயின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

   

அதனை தொடர்ந்து “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் அமலாபாலின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். தற்போது நன்றாக வளர்ந்துஆளே  மாறிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. அதில் மீனா தன்னுடைய மகள் நைனிகாவோடு வந்திருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் தெறி படத்தில் நடித்த குழந்தையா இது..? என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.