தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுசிலா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதல்சேரியில் தன்னுடைய உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய அக்கா மகன் ஆன அன்பழகன்(30) என்பவர் வழி மறித்து பி சுசிலாவுடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்பழகன் சுசிலாவை கொடூரமாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார் .இதில் படுகாயம் அடைந்த சுசிலா பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்; இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசிலாவின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்த முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு மற்றும் முன் விரோதம் தான் இந்த கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தன்னுடைய அக்கா மகனே சித்தியை கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
