பக்காவாக பிளான் போட்ட வெற்றிமாறன்.. அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?.. செம மாஸ் அப்டேட்..!

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். தலைப்புலி எஸ் தானு தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த படம் தள்ளிப் போய் கொண்டே இருந்த காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் அப்சட்டில் இருந்தனர்.

விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை: தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன்  | I am not taking movies for awards says Vetrimaran - Tamil Filmibeat

   

இப்படியான நிலையில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது படத்தில் நடிக்க உள்ளதால் அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

   

பேசி தீர்க்கப்பட்டுவிட்டது” - ரெட்கார்டு விவகாரம் குறித்து நடிகர் சிம்பு  விளக்கம் | actor simbu talk about red card issue in indian 2 movie audio  launch - hindutamil.in

 

இதனால் வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் வாடிவாசல் மீண்டும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனிடையே பார்க்கிங் பட இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் சந்தானம், கையாடு லோகர் ஆகியோர் நடிக்க உள்ளனர். அதனைப் போலவே தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் தலா ஒரு படங்களில் சிம்பு நடிக்க உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு…. படப்பிடிப்பு எப்போது?

மேலும் இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் கமலுடன் சேர்ந்து தக் லைஃப் படத்தில் சிம்பு நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு காதல் படத்திலும் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தனுஷை வைத்து வெற்றிமாறன் வட சென்னை 2 திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இப்படி சிம்பு மற்றும் வெற்றிமாறன் இருவருமே பிசியாக கமிட் ஆகியுள்ள நிலையில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.