அதிரடியாக மாறிய இந்த வாரம் TRP.. சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி கெத்து காட்டிய விஜய் டிவி..!

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் மக்களை மனம் கவர்ந்த சீரியல்கள் பெரும்பாலும் சன் டிவியில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக விஜய் டிவியில் வித்தியாசமான கதை அம்சத்தோடு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களுக்கும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு கிடைக்கின்றன. அதன்படி இந்த  வாரத்திற்கான தமிழ் சீரியல்களின் டிஆர்பி வெளியாகி உள்ளது.

kayal serial latest episode update upcoming week | Kayal Serial : கயலிடம் உண்மையை உடைக்கப் போகும் கபிலன்...! எழிலுக்கு என்ன நடக்கப் போகுது தெரியுமா..?

   

கயல்:

   

பல மாதங்களுக்கு பிறகு மறுபடியும் கயல் சீரியல் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.63 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

 

சிங்க பெண்ணே சீரியலுக்கு விழுந்த பெரிய அடி.. சேனலுக்குள்ளேயே நடந்த போட்டா போட்டி - Cinemapettai

சிங்க பெண்ணே:
ஆனந்தி கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற உண்மை யாருக்கும் தெரியாத பட்சத்தில் கதையை இழுத்து அடித்துக்கொண்டு வருவதால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 8.60 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது.
நந்தினி எடுத்த முடிவு, விவேக் சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! | Tamilstar
மூன்று முடிச்சு:
கடந்தவாரம் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.57 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒரே மாதிரியான கதையை கொண்டு வருவதாலும் சூர்யா வழக்கம்போல் குடித்துவிட்டு நந்தினையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும் தான் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மருமகள் சீரியல் மார்ச் 01 எபிசோட்: ரிலீஸிற்கு பின் ரொமான்ஸ்.. ஆதிரைக்கு கடவுளாக மாறிய டிஜிபி.. மருமகள் சீரியல்..
மருமகள்:
எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக மருமகள் சீரியல் நான்காம் இடத்தில் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.87 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.
Pandian Stores 2 | 23rd to 28th September 2024 - Promo
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
 முதல் முறையாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிக புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.68 புள்ளிகளை பெற்றுள்ளது.
Annam 05-06-2025 Sun Tv Serial • TamilDhool
அன்னம்:
கார்த்திக்கின் ஆபீஸராக வந்திருக்கும் ரம்யா, கார்த்திக்கை பார்க்க விரும்பாமல் வெறுப்பை காட்டுகிறார். ரம்யாவை சமாளிக்க முடியாமல் கார்த்திக் தடுமாறுகிறார். கார்த்திக்கின் மனநிலைமை புரியாமல் அன்னம் பாவமாக நிற்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.49 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தில் இருக்கிறது. இதே மாதிரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்அய்யனார் துணைசீரியலும் இதே புள்ளிகளை பெற்ற ஆறாவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்க ஆசை: ஸ்ருதிக்கு கிடைத்த ஆதாரம்.. முத்து பற்றி அருணுக்கு தெரிந்த உண்மை.. அண்ணாமலை சொன்ன ஃபிளாஷ்பேக் | Siragadikka Aasai serial: Highlights and Review of ...
சிறகடிக்க ஆசை:
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 7.32 புள்ளிகளைப் பெற்று7வது இடத்திற்கு போய்விட்டது. மொத்தமாக கதை சொதப்பிவிட்டது என்பதற்கு ஏற்ப ட்ராக் தடுமாறிக் கொண்டு வருகிறது.
Mahanadhi Serial Vijay Response Vennila | மகாநதி
மகாநதி:
விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலாக இருக்கும் மகாநதி சீரியல் இந்த வாரம் 6.71 புள்ளிகளை பற்றி 8வது இடத்தில் இருக்கிறது. வெண்ணிலா கோமா நிலைமைக்கு போன நிலையில் விஜய் தலைமறைவாக இருக்கிறார். விஜய்க்கு வந்த பிரச்சினையை சமாளிக்கும் விதமாக காவிரி முயற்சி எடுத்து வருகிறார்.
Ethirneechal: அரிவாளுடன் சிங்கப்பெண்ணாக மாறிய நந்தினி... பேரதிர்ச்சியில் நின்ற குடும்பம் - மனிதன்

எதிர்நீச்சல்:

ஒரு காலத்தில் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது இந்த சீரியலை தயவு செய்து முடித்து விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு மொத்த வன்மத்தை காட்டி வருகிறார்கள். இதனால் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.52 புள்ளிகளை பெற்று  இடத்தில் இருக்கிறது.

கார்த்திகை விட்டு பிரியும் ரேவதி.. வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன.. கார்த்திகை தீபம்! | zee tamil television Karthigai Deepam serial June 4th Episode full review new - Tamil Filmibeat

கார்த்திகை தீபம்:

மக்களின் பேவரைட் சீரியலாக ஜீ தமிழில் கொண்டாடப்படும் சீரியல் கார்த்திகை தீபம்இந்த வாரம் 6.15 புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் இருக்கிறது.