ஓவர் பில்டப் கொடுத்தும் இப்படி ஆயிடுச்சே.. தக் லைஃப் முதல் நாள் வசூலே இவ்வளவுதானா..?

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் தக் லைப். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படத்தின் முதல் அறிவிப்பில் இருந்து ரசிகர்கள் ஒவ்வொன்றையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தக் லைஃப் ப்ரீ-புக்கிங் வசூல்! மொத்தம் இத்தனை கோடியா? - Sathiyam TV

   

இந்தத் திரைப்படம் நேற்று கர்நாடகா தவிர உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் கூறிய விஷயம் என்றால் படம் மிகவும் சுமாராக உள்ளது. இப்படி ஒரு திரை கதையில் சுவாரஸ்யம் இல்லாத படத்தை மணிரத்தினிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என்றெல்லாம் விமர்சித்தன. அதுமட்டுமல்லாமல் படத்தில் உருப்படியாக உள்ள விஷயம் என்றால் அது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு மட்டும் தான் எனவும் மற்றபடி படத்தில் எதுவும் பெரிதாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது.

   

Thug Life Box Office: ஏற்றமா.. ஏமாற்றமா.. தக் லைஃப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்  வசூல் விபரம் இதோ! | Kamal Haasan STR Thug Life Day 1 Box Office Collection  All Over India Details Here - Tamil Filmibeat

 

படத்தின் கதை பழிவாங்கல் தான். இதுபோல ஏற்கனவே தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகிவிட்டது. படத்தின் திரைக்கதையில் சுவாரசியங்கள் எதுவும் கிடையாது. படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக உள்ளது. ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று கூறினார்கள். படம் முதல் நாளில் கர்நாடகா தவிர தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் சேர்த்து இந்தியா முழுவதும் 17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் முதல் நாளே மிக குறைவாக வசூல் செய்துள்ளது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.