இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு சென்ற கமல்ஹாசன் நடித்த படங்கள் இவ்வளவா?.. இதோ முழு லிஸ்ட்..!

By Nanthini on வைகாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பல துறைகளில் கமல்ஹாசன் உள்ளார். தனி நபராக இதுவரை நான்கு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவராக இருந்துள்ளார். அதன்படி வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கமல்ஹாசனின் படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

kamalahasan masterpiece Hey Ram completes 23 years of journey in tamil  cinema special story | 23 years of Hey Ram: காலத்தை வென்ற கலைஞனின்  பொக்கிஷம்.. தமிழ் சினிமா கண்ட வரலாறு.. 23 ஆண்டுகளை ...

   

ஹே ராம்:

   
2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் எழுதி இயக்கி இவரே நடித்திருந்த நிலையில் கமல்ஹாசன் உடன் ஷாருக்கான் மற்றும் வசுந்தராதா சொல்லிட்ட பலரும் நடித்திருந்தனர். சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் படுகொலையையும் சுதந்திரப் போராட்டத்தையும் அற்புதமாக மக்களுக்கு வெளிப்படுத்திய திரைப்படம் இதுவாகும்.
இந்தியன் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

இந்தியன்:

 

1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கி இருந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சேனாதிபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் லஞ்சம் என்ற கருத்துக்கு எதிராக அவர் எப்படி இந்தியாவில் இருந்து ஊழலை அகற்ற வேண்டும் என்று பல கொலை குற்றங்களை செய்தார் என்பதை இந்த படம் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது.

குருதிப்புனல்: இப்படியொரு போலீஸ் படம் இனிமேல் எடுக்க முடியுமா? கமல் -  பி.சி.ஸ்ரீராம் செய்த மேஜிக்! | Kuruthipunal: Revisiting Kamal Haasan and PC  Sreeram's classic cop ...

குருதிப்புனல்:

கடந்த 1995 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் இயக்கிய இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், நாசர் மற்றும் அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நக்சலைட் பயங்கரவாத குழுவை கட்டுப்படுத்த முயலும் கமல்ஹாசன் மற்றும் அர்ஜுன் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் இவர்களின் தலைவராக நாசர் நடித்திருந்தார்.

தேவர் மகன் கதை இவருடையதா.? அசால்டாக சுட்ட ஆண்டவர் - Cinemapettai

தேவர் மகன்:

1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கிய தேவர்மகன் திரைப்படத்தை கமல்ஹாசன் எழுதி இருந்தார். இதில் கமல்ஹாசன் உடன் சிவாஜி, ரேவதி, கௌதமி மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஒரு வழிபாட்டு கிளாசிக் மற்றும் கிராமத்தில் உள்ள இரண்டு குடும்பங்களை பற்றி அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது.

நாயகன் மீண்டும் வரார் - கமலின் 'நாயகன்' நவம்பர் 3-ல் ரீ-ரிலீஸ் | kamal  haasan starrer nayakan movie re released on november - hindutamil.in

நாயகன்:

மணிரத்தினம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சரண்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இது ஆக்சன் கிரைம். தாராவி குளிசை பகுதிகளில் வசிக்கும் மக்களின் குரலாக வேலுநாயகர் வேடத்தில் கமல்ஹாசன் நடித்த அசதி இருந்தார்.

37 ஆண்டு..முக்கோண காதல் மூவி 'சாகர்'..காதலுக்காக தியாகம் செய்யும் கமல்..எஸ்பிபியின்  முத்தான பாடல்கள் | 37 Years..Triangle Love Movie 'Sagar'..Kamal Sacrifices  for Love ...

சாகர்:

தமிழில் கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தின் ரீமேக் ஆக ஹிந்தியில் உருவான திரைப்படம் தான் சாகர். ரமேஷ் சிப்பி இயக்கத்தில் கமல்ஹாசன், ரிஷிகாபூர் மற்றும் டிம்பில் கபாடியா நடித்த இந்த திரைப்படத்தின் கதை முக்கோண காதல் பற்றியது. இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Swathi Muthyam Movie Video Songs || Kamal Hassan, Radhika - YouTube

ஸ்வாதி முத்யம்:

பழம்பெரும் இயக்குனர் கே விஸ்வநாதன் சுவாதி முத்யம் 1986 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு நுழைந்தது. மதிப்புமிக்க போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் தெலுங்கு திரைப்படம் மற்றும் இரண்டாவது தென்னிந்திய திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தன்னுடைய பாட்டியுடன் கிராமத்தில் வசிக்கும் மன இறுக்கம் கொண்ட நபராக நடித்திருந்தார்.