வெறும் 250 ரூபாய் சம்பளத்துக்கு அந்த வேலை பார்த்தேன்.. முதல்முறையாக மனம் திறக்கும் விஜய் சேதுபதி..!

By Nanthini on வைகாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமா உலகில் முன்னோடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் நுழைந்த குறுகிய நாட்களிலேயே தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மூலமாகவும் பேச்சு மூலமாகவும் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளார். தற்போது வரும் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்து வருகின்றார். இதனாலையே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.

வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் எனக்காக சிபாரிசு செய்த இயக்குநர்: விஜய்  சேதுபதி தகவல் | The director who recommended me: Vijay Sethupathi -  hindutamil.in

   

இவர் கடந்த 2000 ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற தொலைக்காட்சி சீரியலில் விஜய் சேதுபதி பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

   

Vijay Sethupathi | Latest Vijay Sethupathi News, Videos, Photos -  Cinemapettai

 

அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில்,  என்னை நானே ஒரு கிங்காக உணர்ந்த தருணம் என்றால் அது நான் சுயமாக சம்பாதித்த போது தான். நாம் சொந்தமாக சம்பாதிக்கும் போது நம்ம கையில் பணம் வரும்போது நமக்கே ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும். முதல் முதலில் நான் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலைக்கு சென்றேன். வடபழனியில் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் கேஷியர் வேலைக்கு சேர்ந்தேன்.

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு | Tamil cinema actor vijay  sethupathi movie release

அப்போ ஒரு நாளைக்கு 3500 வரை கலெக்ஷன் வரும். தனியா போன அந்த பணத்தை யாராவது எடுத்துருவாங்கன்னு ஒருத்தர் என் கூடவே வந்து வீட்ல விட்டுட்டு போவாரு. அதுவே நைட் ஒரு 1.30 மணி ஆகிடும். அந்த டைம்க்கு படுத்தா காலையில ஒரு 7:00 மணிக்கு எந்திரிச்சு ரெடியாகிட்டு காலேஜுக்கு போவேன். காசு சம்பாதிக்கிறது என்பதால் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதன் பிறகு எஸ்டிடி பூத்தில் 250 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். அண்ணாநகர் ஐ ஸ்டைலில் ஒரு நான்கு மாசம் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் அச்சிச்டண்டா வேலை பார்த்தேன். கடைசியா கார் எப்படி இருக்குன்னு கேட்டு ஒரு பார்ம் பில் பண்ணா 100 ரூபாய் தருவாங்க. அந்த வேலைக்கு கூட போயிருக்கேன். நானே வேலை செஞ்சு சம்பாதிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அப்படி சம்பாதிச்சு கிடைக்கிற பணத்தில் இருக்கிற சந்தோஷம் வேற எதுலயுமே இருக்காது என்று விஜய் சேதுபதி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.