107 கிலோவில் இருந்து 70 கிலோ குறைச்சுட்டேன்.. சோசியல் மீடியாவை கலக்கும் ஃபேமஸ் திருநங்கை அனுஸ்ரீ சொல்லும் சீக்ரெட்..!

By Nanthini on வைகாசி 19, 2025

Spread the love

சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மவுசு இருக்கிறதோ அதனைப் போலவே திருநங்கைகளுக்கும் மவுசு அதிகமாக உள்ளது. அதில் சிலர் எப்போதுமே சோசியல் மீடியாக்களில் பேமஸான நபராக இருப்பார்கள். அவர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அப்படி சமீபத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் தான் திருநங்கை அனுஸ்ரீ. கூத்தாண்டவர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து திருநங்கைகள் அங்கு ஒன்று கூடுவது வழக்கம்.

அனுஶ்ரீ

   

இந்த ஆண்டு நடந்து முடிந்த கூத்தாண்டவர் திருவிழா மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறார் திருநங்கை அனுஶ்ரீ. இவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் பெண்களே இவரின் அழகில் தோற்றுவிடுவார்கள், திருநங்கை என்றே சொல்ல முடியாது என்றுதான் கமெண்ட் செய்து வருகிறார்கள். யார் அந்த அனுஸ்ரீ என்று அனைவருமே இணையத்தில் தேட தொடங்கியுள்ளனர். கூத்தாண்டவர் திருக்கோவில் சித்திரை திருவிழாவில் கலந்து கொண்ட பிறகு இவர் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதன்படி இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் உடல் எடை குறித்த ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

   

கூத்தாண்டவர் நிகழ்ச்சியில் அனுஶ்ரீ

 

அதில், நான் நிறைய ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் நான் 107 கிலோ எடை இருந்தேன். எனக்கு அப்போ இருந்த உடம்பு சுத்தமா பிடிக்கவே இல்லை. அதன்பிறகு எப்படியாவது உடம்பை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து உடல் எடையை குறைப்பதற்கான டிரீட்மென்ட் எடுத்துக்கொண்டேன். Gastric pipers surgery என்றால் நம் குரலை சுருக்குவது தான். அதை செய்து கொண்ட பிறகு என்னால் கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது. தண்ணி கூட குடிப்பதற்கு ஒரு லிமிட் தான் இருந்தது. அதெல்லாம் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஒரு மூணு மாசம் கஷ்டப்பட்டு அதெல்லாம் பாலோ பண்றதுக்கு செத்துரலாம் என்றெல்லாம் தோணுச்சு.

இதற்கு மட்டுமே சுமார் 8 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். உடல் எடையை குறைத்த பிறகு எனக்கு பாவாடை தாவணி போட்டு பாக்கணும் பாவாடை சட்டை போடணும் என்றெல்லாம் ரொம்ப ஆசையா இருந்துச்சு. அதுதான் முதல் முறையா போட்டு பார்த்தேன். சேலை கூட ரொம்ப ஸ்ட்ரக்ச்சர் ஆக கட்ட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதால் அதெல்லாம் உடல் எடையை குறைத்த பிறகு எனக்கு நிறைவேறியது. இப்போ பாக்குறவங்க எல்லாம் சுத்தமா வித்தியாசமே தெரியல அப்படியே பெண்ணின் அழகையே மிஞ்சும் அளவுக்கு இருக்கீங்க என்று சொல்லும் போதெல்லாம் மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கு. நாம் எடுத்த இந்த ஜென்மத்துல இந்த சந்தோசம் போதும் என்று தான் எனக்கு தோணுது. 107 கிலோ எடை இருந்த நான் இப்போ வெறும் 70 கிலோ வரை எடைய குறைச்சதனால ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று அனுஸ்ரீ அந்த பேட்டியில் பேசியுள்ளார்.