2025 ஐபிஎல் முடிந்த கையோடு ஓய்வை அறிவிக்க காத்திருக்கும் 7 ஸ்டார் வீரர்கள்.. லிஸ்ட்ல தல தோனியும் இருக்காரா..?

By Nanthini on வைகாசி 10, 2025

Spread the love

மற்ற விளையாட்டுப் போட்டிகளை விட எப்போதுமே கிரிக்கெட்டுக்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வந்து விட்டால் ரசிகர்களின் குதூகலத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. தற்போதைய சூழலில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நிலையில் உள்ளது. இப்படியான நிலையில் சில முன்னணி வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

எனக்கு 44 வயது ஆகப்போகிறது.. ஐபிஎல் ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி -I'm turning 44.. Dhoni opens up about IPL retirement

   

தோனி:

   

43 வயதாகும் தோனியால் வர வர சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. நடப்பு தொடரில் அவர் மொத்தமாகவே 76 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். அதே சமயம் அவருடைய கேப்டன்சியும் சுமாராக இருந்ததால் புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் தோனி ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை காக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கண் என விஷயங்களை 'எளிமையாக' வைத்திருப்பதாக அஜிங்க்யா ரஹானே ...

அஜிங்கியா ரஹானே:

2025 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் 36 வயதான ராகமே 9 போட்டிகளில் 271 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று அரை சதங்களை எடுத்துள்ள இவருடைய பேட்டிங் நிலையாக உள்ளது. ஸ்ட்ரைக் ரேட்டும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் கேப்டன்சியிலும் ரஹானே சரியாக செயல்படாத நிலையில் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஷ்வின் சிஎஸ்கே பங்கு விசாரணை; ஐபிஎல் 2025ல் எதிரிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது

ரவிச்சந்திரன் அஸ்வின்:

ஐபிஎல் 2025 சீசனில் பெரிய எதிர்பார்ப்போடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டுக்கு மேல் எகானமி ரேட்டுடன் ஏழு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். நிறைய ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் பேட்டிங்கிலம் இவர் அணிக்கு சரியாக பங்களிக்க முடியவில்லை. இப்படியான நிலையில் இந்தப் போட்டியை முடித்த கையோடு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மொயின் அலி | Cricbuzz.com

மொயின் அலி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான 37 வயதான இவர் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மிக மோசமான ஆட்டத்தை ஆடிவரும் நிலையில் இவரது இரண்டு பேட்டிங் வாய்ப்புகளில் 5 மற்றும் 0 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார். அதனைப் போலவே பவுலிங் செய்யும்போதும் அதிகபட்ச ரண்களை விட்டுக் கொடுத்தார். இப்படியான நிலையில் இவர் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என கூறப்படுகிறது.

ஐபிஎல் 2025க்கான டெல்லி கேப்பிடல்ஸ் துணைக் கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ஃபாஃப் பிளெசிஸ் :

ஐபிஎல் 2025 ஆம் சீசனில் டெல்லி கேப்பிட்டல் சனிக்காக விளையாடி வரும் 40 வயதாகும் இவர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த ஏழு போட்டிகளில் ஒரு அரை சதம் உட்பட 185 ரன்கள் மட்டுமே இவர் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு வெற்றி பெற்று தரக்கூடிய அளவுக்கு இவருடைய ஆட்டம் இல்லாததால் இந்த ஐபிஎல் சீசன் முடியும் பட்சத்தில் இவர் ஓய்வை அறிவிப்பார் என தெரிகிறது.

IPL 2025 | Gujarat Titans | Ishant Sharma Profile

இஷாந்த் ஷர்மா:

குஜராத் டைட்டன்ஸ் வீரரான இவருடைய ஐபிஎல் 2025 சீசன் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது. விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியை இவர் அதிக எகாணமி ரேட்டிங் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். 36 வயதான இஷாந்த் ஷர்மாவால் பீல்டிங்கில் சரியாக செயல்பட முடியாததால் தன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Karan Sharma Biography | Girlfriends | Debut | Salary | Favourites

கரண் ஷர்மா:

மும்பை இந்தியன்ஸ் வீரரான கரன் ஷர்மா 2025 ipl சீசனில் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல செயல்படவில்லை. சில போட்டிகளில் இவர் மேட்ச் வின்னராக ஜொலித்தாலும் இவருடைய பழைய பந்துவீச்சு தற்போது இல்லை என்பது தான் ரசிகர்களுடைய கருத்தாக உள்ளது. மும்பையில் இளம் ஸ்பின்னர்கள் வந்துவிட்ட நிலையில் இவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.