13 வருட பழக்கம், 7 வருட லவ் ஸ்டோரி.. நடிகர் ஜீவாவின் காதல் மனைவி யார் தெரியுமா..?

By Nanthini on வைகாசி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் தான் ஜீவா. பலருக்கும் பிடித்தமான ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சேரன் பாண்டியன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜீவா தன்னுடைய தந்தையின் ஐம்பதாவது படமான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தித்திக்குதே திரைப்படத்தில் நடித்த ஜீவா அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நட்பில் இருந்து 7 வருட காதல்.. க்யூட் லவ் ஸ்டோரி - நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? | Actor Jeevas Cute Love Story And About His Wife

   

இந்தப் படம் அவரின் கேரியரில் பிரேக் த்ரூ திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த டிஸ்யூம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து திரைப்படங்களிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தது. இறுதியாக பிளாக் என்ற க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

ஜீவா குடும்பம், சிறுவயது புகைப்படங்கள் – ஜீவா | பிரபல குடும்ப விக்கி

 

தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்துக் கொண்டே இருக்கும் ஜீவா கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜீவா தன்னுடைய 10 வயதில் முதல் முறையாக சுப்ரியாவை சந்தித்துள்ளார். இருவருமே ஒரே பள்ளியில் தான் படித்தனர். சிறுவயது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. முதலில் ஜீவா தான் தன்னுடைய காதலை சுப்ரியாவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் - சினிஉலகம்

சுப்ரியாவுக்கு ஜீவா மீது காதல் இருந்த நிலையில் உடனே அவரும் ஜீவாவின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரும் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஜீவா கிராபிக்ஸ் டிசைனிங் படித்த நிலையில் அதன் பிறகு சினிமாவில் ஹீரோவாக நுழைந்து விட்டார். மறுபுறம் எம்பிஏ படித்து முடித்த சுப்ரியா இன்டீரியர் டிசைனிங் படித்துள்ளார். இருவரும் ஏழு ஆண்டுகள் காதலர்களாக இருந்த நிலையில் தாங்கள் இருவரும் தங்கள் துறையில் ஓரளவு முன்னேறிய பிறகு காதலை வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்பந்தம் வாங்கி உள்ளனர்.

நடிகர் ஜீவா தனது மனைவி மற்றும் மகனுடன் உள்ள இந்த புகைப்படத்தை  பார்த்துள்ளீர்களா ! இதோ.. - சினிஉலகம்

அதன்படி இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஜீவா 2007 ஆம் ஆண்டு தனது காதலை சுப்ரியாவை திருமணம் முடித்து மனைவியாக்கினார். இவர்களுடைய திருமணம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. திரைத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஜீவா எந்த சர்ச்சைகளும் இல்லாமல் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகின்றார். தற்போது ஜீவா தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.