தமிழ் சினிமாவை பொருத்தவரையில் எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரக்கூடிய திரில்லர் படங்கள் இன்றைய காலகட்டத்தை விட 80 மற்றும் 90 காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படி என்பது மட்டும் 90 கால கட்டங்களில் வெளியான சில தரமான கிளாசிக் திரில்லர் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
![நூறாவது நாள் (Nooravathu Naal) by இளையராஜா [Ilaiyaraaja] (EP, Filmi): Reviews, Ratings, Credits, Song list - Rate Your Music](https://e.snmc.io/i/600/s/69a7be3adceedb33562b67cc04dfc723/11076492/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-ilaiyaraaja-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-nooravathu-naal-Cover-Art.jpg)
நூறாவது நாள்;
கடந்த 1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் எழுதி இயக்கி இருந்த மர்மம் நிறைந்த திரில்லர் திரைப்படம் தான் நூறாவது நாள். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குறைந்த செலவில் வெறும் 12 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மலையாளம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. மர்மம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்த திரைப்படம் காலம் கடந்தும் என்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.
கருப்பு ரோஜா:
கடந்த 1996 ஆம் ஆண்டு பன்னீர் இயக்கத்தில் ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் கருப்பு ரோஜா. இந்த படத்தில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் எம் எஸ் வி ராஜா இசையமைத்திருந்தார். ஒரு மர்மம் நிறைந்த த்ரில்லர் கதை காலத்துடன் வெளிவந்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மிரள வைத்தது. சாத்தானுக்கு குழந்தையை பலி கொடுக்க நினைக்கும் வில்லன் அதனை தடுக்க நினைக்கும் ஹீரோ என கதை அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஊமை விழிகள்:
கடந்த 1986 ஆம் ஆண்டு அரவிந்த் ராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஊமை விழிகள். இந்த படத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், ஜெய்சங்கர் மற்றும் சரிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட கடற்கரைக்கு வரும் இளம் பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போக அதை ஹீரோ கண்டுபிடிக்கும் கதையுடன் திரில்லர் படமாக இந்த படம் வெளிவந்திருந்தது.

இணைந்த கைகள்:
கடந்த 1990 ஆம் ஆண்டு என் கே விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இணைந்த கைகள். இந்த படத்தில் அருண் பாண்டியன் மற்றும் ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். எதிரிகளின் ஆர்மி சிறையில் இருக்கும் ராணுவ மருத்துவரின் மகனை காப்பாற்ற செல்லும் ஒரு ராணுவ ஹீரோ மற்றும் கைதேர்ந்த தொழிலாளியின் மர்மமான கதை தான் இது.

புலன் விசாரணை:
கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் நிறைந்த மர்ம திரைப்படம் தான் புலன்விசாரணை. இந்த திரைப்படத்தை ஆர்கே செல்வமணி இயக்கி இருந்த நிலையில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தில் ரூபிணி, ஆனந்த்ராஜ் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் தமிழகத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்வை தழுவிய திரைப்படம் தான் இது.

புரியாத புதிர்:
கடந்த 1990 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மர்மம் நிறைந்த திரில்லர் படமாக வெளியானது தான் புரியாத புதிர். 1989 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான தர்காவின் ரீமேக் தான் இந்த திரைப்படம். ஆர் பி சவுத்ரி இந்த படத்தை தயாரித்து இருந்த நிலையில் ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ரேகா மற்றும் சித்தாரா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்த நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தன் காதலியை கற்பழித்துக் கொன்ற மூன்று பேரை ஹீரோ பழிவாங்கும் கதை தான் இது.
