தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். விஜய்க்கு அடுத்ததாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனைப் போலவே விஜய்க்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் என்றால் அது அஜித் தான். அமராவதி திரைப்படத்தில் தொடங்கிய இவருடைய சினிமா பயணம் சுமார் 32 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த 32 வருடங்களில் பல வெற்றி தோல்விகளை அஜித் சந்தித்து விட்டார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. அந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தேவையான விஷயங்கள் எதுவும் இல்லாததால் படம் தோல்வியை தழுவியது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஏனென்றால் அஜித் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்கள் அஜித்தை எப்படி காட்டினால் அவர்களுக்கு பிடிக்கும் என்பதை புரிந்து கொண்டு ஒரு அஜித் ரசிகராகவே இந்த திரைப்படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுக்க திருப்திப்படுத்தி இருக்கிறது. இதுவரை இந்த திரைப்படம் 230 கோடி வரை வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் சுமார் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க அஜித்தின் அடுத்த படம் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மீண்டும் அஜித்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அதேசமயம் அஜித்தை வைத்து படம் இயக்க தனுசும் ஆர்வம் காட்டி வருகின்றார். ஆனால் அவரிடம் இன்னும் அஜித் முழு கதையை கேட்கவில்லை என கூறப்படுகிறது. அஜித் தற்போது கார் ரேஸில் உள்ள நிலையில் அதற்காக கண்டம் விட்டு கண்டம் போய் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் தான் கார் ரேஸ் முடிவடைகின்றது. அதன் பிறகு தன்னுடைய அடுத்த படம் இயக்குனர் யார் என்பதை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அவர் முடிவு செய்வார் என தெரிகிறது.

இதனிடையே புஷ்பா படை இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சிலர் கிளப்பி விட்டனர். இது செய்தியாளர்களின் whatsapp குரூப்பில் பகிரப்பட உடனே பதறிப் போன சுரேஷ் சந்திரா இந்த செய்தியில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார். பொதுவாக இது போன்ற வதந்திகளுக்கு எப்போதுமே பதிலளிக்காமல் கண்டும் காணாமல் இருக்கும் சுரேஷ் சந்திரா தற்போது அஜித் படத்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் குறித்து வெளியான செய்திக்கு பதறி கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் என்றால் அதில் ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.
