எம்ஜிஆருக்காக தியாகம் செய்யத் துணிந்த குடும்பம்.. பதிலுக்கு புரட்சித் தலைவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

By Nanthini on சித்திரை 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

எம்ஜிஆர் 100 | 84 - தமிழ் வளர்த்தோன்! | எம்ஜிஆர் 100 | 84 - தமிழ்  வளர்த்தோன்! - hindutamil.in

   

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

   

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்” - எம்ஜிஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி ட்வீட்  | MGR was a true icon of Tamil cinema and a visionary leader: PM Modi  haiils - hindutamil.in

 

 

இப்படியான நிலையில் வரி பாக்கிக்காக எம்ஜிஆரின் சொத்துக்கள் ஏலம் விடப்படலாம் என வதந்தி ஒன்று பரவிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திண்டிவனத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஷெரினும் அவருடைய தாயாரும் சேர்ந்த எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், எம்ஜிஆரின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்ற செய்தியை அறிந்து தாங்கள் வேதனை அடைந்ததாகவும், தாங்கள் வசித்து வரும் வீடு 40 ஆயிரம் ரூபாய்க்கு போகும் அதனை விற்று உங்களுக்கு பணம் அனுப்புகிறோம் அதை வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தனர். இதனை படித்த எம்ஜிஆர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அந்த தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கடிதம் மூலம் அறிந்த எம்ஜிஆர் அந்த தாயாரை சந்திப்பதற்காக திண்டுக்கல் சென்றார்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..எம்ஜிஆர் எனும் மந்திர சொல்! வாத்தியாராய்  வணங்கும் மக்கள்! காரணம்? | Today is the birthday of MGR popularly known as  the puratchi ...

அங்கு காரில் இருந்து இறங்கி சந்து சந்தாக அந்த தாயாரின் வீட்டுக்கு எம்ஜிஆர் நடந்து சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் எம்ஜிஆரை பார்த்த ஊர் மக்கள் அவரை நலம் விசாரித்ததோடு கூடவே அவருடன் நடந்து சென்றனர். பிறகு அந்த தாயை சந்தித்து நலம் விசாரித்த எம்ஜிஆர் தன் கொண்டு வந்த பணத்தை அவரிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்க மறுத்த நிலையில் எம்ஜிஆர் என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டால் இந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவளிடம் அந்த பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இப்படி எம்ஜிஆர் பல தாயாருக்கும் மகனாக இருந்து உதவி செய்துள்ளார்.