விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாடு நீயாக டிடிக்கு அடுத்து அந்த சேனலின் செல்ல பிள்ளையாக இருப்பவர்தான் பிரியங்கா தேஷ் பாண்டே. சிறுவயதிலேயே தந்தையே இழந்த இவர் தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். படிப்படியாக கஷ்டப்பட்டு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார். இவர் விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் ஆறு ஆண்டு காலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தன் அம்மா மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு நேற்று முன்தினம் வசி என்பவர் உடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவரின் திருமண வீடியோ இணையத்தில் வெளியான பிறகு தான் பிரியங்காவுக்கு திருமணமானதே பலருக்கும் தெரிய வந்தது. பிரியங்காவை திருமணம் செய்து கொண்ட பசி ஒரு டிஜே என்று கூறப்படுகிறது. இப்படியான நிலையில் பயில்வான் ரங்கநாதன் பிரியங்காவின் திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பிரியங்கா விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். பிரியங்கா தேஷ் பாண்டே என்ற பெயரை கேட்டதுமே வட இந்திய பெண் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்து விடும். பிரியங்காவை பொறுத்த வரையில் அவர் அம்மாவுக்கு செல்ல பிள்ளை.

அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்பார்கள். பிரியங்கா விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அதே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சிரித்துக் கொண்டே மற்றவர்களுக்கு விஷ ஊசி போடுவதில் சாணக்கியம் தனம் படைத்தவர் தான் பிரியங்கா. அதனைப் போலவே சிண்டு முடிவதிலும் திறமையானவர். பிரியங்கா கடந்த சில வருடங்களாக பசி உடன் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அது உண்மையாக கூட இருக்கலாம்.

அதேசமயம் பிரியங்கா திருமணம் முடிந்த கையோடு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். உண்மையிலேயே பிரியங்காவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆசை வந்திருக்கலாம் அல்லது கர்ப்பமாகி விட்டு அதை காரணமாக வைத்துக் கொண்டு அவசர அவசரமாக திருமணத்தை முடித்து இருக்கலாம். எதையும் நாம் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி இல்லை என்றாலும் பிரியங்கா தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்பவர் என்பதால் அவருக்கும் வயதாகிக்கொண்டே செல்லும் காரணத்தினால் உனக்கும் 36 வயது ஆகிவிட்டது நானும் சென்ற பிறகு உன்னை யார் பார்த்துக் கொள்வார் உனக்காக ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கூறி இருக்கலாம்.

தன் அம்மாவின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு கூட பிரியங்கா அவசர அவசரமாக திருமணத்தை முடித்து இருக்கலாம். மறுபக்கம் பிரியங்கா தற்போது திருமணம் செய்துள்ள வசி பிரியங்காவை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர் தான். தற்போது திருமணம் முடித்துள்ள பிரியங்கா ஒருவேளை கர்ப்பம் ஆகிவிட்டால் விஜய் டிவியில் இருந்து விலகலாம். இதனால் விஜய் டிவி தான் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். 36 வயதில் அறுவது வயது நபரை திருமணம் முடித்துள்ள பிரியங்காவை பற்றி விமர்சிப்பதற்கு ஒன்றும் கிடையாது. அதற்கெல்லாம் அவரிடம் கொடுக்கும் ஆளும் இல்லை என்று பிரியங்காவின் அவசர திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
