ஒருவழியாக ஶ்ரீயை பத்திரமாக மீட்ட லோகேஷ்.. எதிர்பாராத உதவி செய்த பிரபு சாலமன்.. வெளிவந்த ரகசியம்..!

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

கடந்த சில நாட்களாகவே இணையத்தில் மிகவும் வைரலான விஷயம் என்றால் அது நடிகர் ஸ்ரீ குறித்த செய்தி தான். மாநகரம் திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்த ஸ்ரீ உடல் மெலிந்து போய் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அதோடு ஸ்ரீ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால் அவர் போடும் ஒவ்வொரு பதிவுகளும் அவ்வாறு தான் இருந்தது. இப்படியான நிலையில் இன்று காலை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகர் ஸ்ரீயை கண்டுபிடித்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் அவரைப் பற்றி எந்த தவறான செய்திகளும் ஊடகங்களில் பதிவிட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வதந்திகளை பரப்ப வேண்டாம்”... நடிகர் ஸ்ரீயை கண்டுபிடித்த லோகேஷ் கனகராஜ்!

   

அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் நேர்காணல்களை நீக்குமாறும்  அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசிக்கு மதிப்பு அளிக்குமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்வதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இப்படியான சூழலில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருந்து வருகின்றார். ஆனால் ஸ்ரீ பற்றி செய்தி வெளியான உடனையே அவரை தேடும் முயற்சியை லோகேஷ் மற்றும் அவரது குழு இறங்கி உள்ளது. அப்படித்தான் ஸ்ரீ டெல்லியில் இருக்கும் விஷயம் லோகேஷ்க்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார் மூலமாக டெல்லியில் இருந்து ஸ்ரீ சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

   

எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ….. செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!

 

தற்போது அந்த குழு சிஇயை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதால் பெரிய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தற்போது மிகப்பெரிய உயரத்தில் லோகேஷ் இருந்தாலும் முதலில் அவரை இயக்குனராக அடையாளம் காணப்பட்டது ஸ்ரீயின் படம் தான். அதோடு அந்த படத்தில் இருந்து இவர்களுடைய நட்பும் நன்றாக இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீ இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டதால் அவருடைய குடும்பம் மன அழுத்தத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் சிரமப்பட்டு வருவதால் அவருடைய குடும்பத்திற்கு லோகேஷ் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் பிரபு சாலமன் அவர்களிடம் கூறி ஸ்ரீக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று பேசியதால் பிரபு சாலமன் தனக்கு கதை கூறுபவர்களிடம் கதையை கேட்கும் இலாகாவாக ஶ்ரீயை நியமித்து அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் வரை இந்த வேலையை பார்க்கட்டும் என்று கூறி மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கி வந்துள்ளார். இப்படி லோகேஷ் மற்றும் பிரபு சாலமன் இருவரும் பல உதவிகளை ஸ்ரீ மற்றும் அவருடைய குடும்பத்திற்கு செய்துள்ளனர். இதை அறியாமல் இவர்கள் இருவரையும் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சிப்பது வேதனைக்குரியதாக உள்ளது.