எம்ஜிஆருக்கு மட்டும் இது நடக்கலனா, மருதமலை முருகனுக்கே மிரட்டல் விடுத்த சின்னப்பா தேவர்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

திரைத்துறையில் எம்ஜிஆர் மற்றும் சின்னப்ப தேவர் இடையே ஆன நட்பு பலரும் அறிந்த ஒன்றுதான். எம்ஜிஆரை வைத்து படம் தயாரிப்பதற்காகவே தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சின்னப்ப தேவர் 1956 ஆம் ஆண்டு தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தை எம்ஜிஆர் நடிப்பில் தயாரித்திருந்தார். எம்ஜிஆரின் தம்பி எம்.ஏ திருமுகம் இயற்கையை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. பெரிய வெற்றி படமாக அமைந்த தாய்க்குப் பின் தாரம் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்த சின்னப்ப தேவர் அதற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் வீட்டில் அடுப்பு எரிய உதவிய சின்னப்பா தேவர்… திரையுலகமே போற்றிய  நட்பின் தொடக்கம் இதுதான்…

   

இதில் எம்ஜிஆருக்கு பதிலாக வேறொரு டப்பிங் கலைஞரை டப்பிங் பேச வைத்து படத்தை தெலுங்கில் வெளியிட்டுள்ளனர். இதனை கேள்விப்பட்ட எம்ஜிஆர் நான் இருக்கும்போது என்னை கேட்காமல் என் குரலை டப் செய்து விட்டார் என்று கோபப்பட்டு உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் பிறகு 1961 ஆம் ஆண்டு வெளியான தாய் சொல்லை தட்டாதே படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு எம்ஜிஆர் அரசியலில் நுழைந்ததும் அவர் சினிமாவை விட்டு விலகும் வரை சின்னப்ப தேவர் எம் ஜி ஆரை வைத்து மட்டுமே அவரது படங்களை சின்னப்ப தேவர் தயாரித்து வந்தார்.

   

எம்.ஜி.ஆர் வீட்டில் அடுப்பு எரிய உதவிய சின்னப்பா தேவர்… திரையுலகமே போற்றிய  நட்பின் தொடக்கம் இதுதான்…

 

இப்படியான நிலையில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. எம்ஜிஆர் என்னதான் கடவுள் மறுப்பு கொண்ட திமுகவில் இருந்தாலும் சின்னப்பா தேவருக்காக மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றியுள்ளார். 1967 ஆம் ஆண்டு எம் ஆர் ராதா எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கழுத்தில் இருக்கும் குண்டை வெளியில் எடுத்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னதாக கேள்விப்பட பல தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் மீண்டும் நடிக்க வரமாட்டார் அப்படி நடிக்க வந்தாலும் பழையபடி நன்றாக பேச மாட்டார் என்று நினைத்து எம்ஜிஆர் நடிப்பதற்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையை அவருடைய அண்ணன் சக்கரபாணியிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் போட்டுக்கொண்டு ஒப்பந்தம்… நட்புன்னா இப்படில  இருக்கனும்!! - Cinereporters

இந்த நிலையில் 10 லட்சம் ரூபாய் பணத்தோடு எம்ஜிஆரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த சின்னப்பா தேவர், முருகா நீங்க குணமாயிடுவீங்க, இது அட்வான்ஸ் தொகை. இதை வைத்து மருத்துவ செலவை பாருங்க. என்னோட அடுத்த படத்துல நீங்கதான் நடிக்கணும். எனக்காக நீங்க இரவோடு இரவா மருதமலைக்கு சென்று விளக்கு ஏற்றுனிங்க. அதனால அந்த முருகன் உங்கள கைவிடமாட்டான். அப்படியே ஏதாவது நடந்தால் அந்த மருதமலைக்கு குண்டு வைத்து விடுவேன் என்று எம்ஜிஆர் மீது இருந்த பாசத்தால் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு சின்னப்பா தேவர் அங்கிருந்து கிளம்பினார். அதன் பிறகு எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியானதும் அவரை அழைத்துக்கொண்டு மருதமலைக்கு சென்று முருகனை வணங்கி விட்டு சின்னப்பா தேவர் வந்துள்ளார்.