இப்போ வரைக்கும் அவர் தான் பாத்துக்குறாரு.. 2 பேரும் சேர்ந்து தான்.. மனம் திறக்கும் பிரபுதேவாவின் முதல் மனைவி..!

By Nanthini on சித்திரை 14, 2025

Spread the love

பொதுவாகவே சினிமா துறையில் ஒன்றாக வேலை செய்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கம் தான். அப்படி திருமணம் செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணிக்கிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து பெற்ற பிரிந்து விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரபுதேவாவும் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராகவும், நடிகர் மற்றும் இயக்குனர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவா தன்னுடன் குரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார்.

Prabhu Deva Gets Married To His Physiotherapist Check Details

   

இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தனர். இதில் மூத்த மகன் 15 வருடங்களுக்கு முன்பே உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு இரண்டு மகன்களையும் பிரபு தேவா பாதுகாத்து வளர்த்து வருகின்றார். இதனிடையே வில்லு திரைப்படத்தை பிரபு தேவா இயக்கிய போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவோடு காதல் ஏற்பட்டது. அப்போது நயன்தாரா தன்னுடைய கையில் பிரபு தேவாவின் பெயரை டாட்டு போட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் பல நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தார்.

   

நடிகர் பிரபு தேவாவின் முதல் மனைவிக்கு பிறந்த இரு மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ - சினிஉலகம்

 

பிறகு சில வருடங்களிலேயே நயன்தாராவோடு பிரச்சனை ஏற்பட அவர் பிரிந்து விட்டார். அதன் பிறகு பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. இப்படியான நிலையில் நடிகர் பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபுதேவா பற்றி பல செய்திகளை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், நானும் பிரபுதேவாவும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதில் மூத்த மகன் மீது நாங்கள் மிகவும் பாசம் வைத்திருந்தோம். ஆனால் அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு எங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் பிரபு தேவா நன்றாக வளர்த்து வருகின்றார்.

மகனுடன் பிரபுதேவா வெளியிட்ட புகைப்படம்... அப்பாவையே ஓவர்டேக் செய்த அழகு

எங்களுக்குள் விவாகரத்து நடந்து விட்டது. ஆனால் விவாகரத்துக்கு பிறகும் பிரபுதேவா குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கின்றார். தினம் தினம் அவர் என்னுடன் பேசிக் கொண்டு தான் இருக்கின்றார். எது நடந்திருந்தாலும் எங்களுக்கு துணையாக பிரபுதேவா இருக்கின்றார். எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தான் முதலில் சொல்வார். சமீபத்தில் கூட என்னுடைய மகனின் பிரபுதேவாவும் டான்ஸ் ஆடியது பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபுதேவாவின் மகன் அவரைப் போலவே டான்ஸ் ஆடுகிறார் என பலரும் பாராட்டினர். எப்படி இருந்தாலும் அவருடைய அப்பாவின் ரத்தம் தானே மகனுக்கும் இருக்கு.

Prabhu Deva News in Tamil, Latest Prabhu Deva news, photos, videos | Zee News Tamil

அதனால அவர் டான்ஸ் ஆடுவதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் என்னுடைய மகன் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கின்றான். அதுபோல என்னுடைய மகனுக்கு படங்களில் நடிக்கவும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது மகனுக்கு சினிமாவில் வருவது பிடிக்கவில்லை. அவன் மருத்துவராக ஆசைப்படுகிறான். எங்கள் பிள்ளைகளின் விஷயத்தை பொறுத்த வரையில் இன்றும் நானும் பிரபுதேவாவும் பேசி தான் ஒரு முடிவை எடுப்போம். பசங்களும் அவங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் என்னையும் பிரபுதேவாவையும் கேட்டுட்டு தான் முடிவு பண்ணுவாங்க. பசங்க விஷயத்தை பொறுத்த வரையில் பிரபுதேவா ஒரு நல்ல தந்தை இன்று பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் பேசி உள்ளார்.