ரம்யா பாண்டியனின் கணவர் குடும்பத்தினர் இப்படிப்பட்டவர்களா?.. மொத்த உண்மையையும் வெளிப்படையாக கூறிய ரம்யாவின் தாயார்..!

By Nanthini on சித்திரை 14, 2025

Spread the love

ஜோக்கர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என பல திரைப்படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு இறுதியில் தான் தனது நீண்ட நாள் காவலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் திருமணம் குறித்து பல்வேறு ஆச்சரிய தகவல்களை அவருடைய தாயார் சாந்தி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ரம்யா பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துள்ளார்.

யாருப்பா அந்த போட்டோகிராஃபர்... ரம்யா பாண்டியனை இப்படி மாத்திட்டாரே : வைரல்  வீடியோ

   

இதனால் பிரபல பள்ளியில் மெரிட் மூலம் சீட்டு கிடைத்துள்ளது. அங்கு பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் சென்றோம் ரம்யா அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவியாக இருந்துள்ளார். பெரிதாக குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லை என்றாலும் இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ரம்யா பாண்டியனின் குடும்பத்தில் திடீரென்று ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. அதாவது வயலுக்குச் சென்ற ரம்யாவின் அப்பா துரைப்பாண்டியன் விஷப்பூச்சி கடித்து உயிரிழந்து உள்ளார். அதன் பிறகு ரம்யாவுக்கு மேலும் அதிகமான பொறுப்புகள் வந்துள்ளது.

   

மாமியாருக்கு propose செய்த ரம்யா பாண்டியனின் கணவர்... திருமண வரவேற்பு -  Exclusive வீடியோ - மனிதன்

 

இப்படியான நிலையில் சினிமா வாய்ப்புகள் வந்ததும் தொடர்ந்து நடித்த ரம்யா பாண்டியன் யோகா கற்றுக்கொள்ள ரிஷிகேஷுக்கு சென்ற போது வாழும் கலை அமைப்பின் யோகா மாஸ்டர் லவல் தவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் அவர் ரம்யாவின் தாயாரிடம் ஒப்புதல் கேட்டதை மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு உள்ளார். அதாவது கார்த்திகை தீபம் ஒன்று வீட்டிற்கு வந்த தவான் திடீரென்று தங்க மோதிரத்தை எடுத்து ரம்யாவின் தாயார் முன்பு தரையில் முட்டி போட்டு அம்மா நீங்க என்னோட மாமியாரா வருவீங்களா என்று கேட்டு ப்ரபோஸ் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டில் சம்மதம் தெரிவிக்க ரம்யா மீதும் அவரது குடும்பத்தின் மீதும் தவான் மிகுந்த மரியாதைடனும் அக்கறையுடனும் இருந்துள்ளார்.

ரம்யா பாண்டியன் கணவர் தவான் இப்படியான வேலையை பார்க்கிறாரா

மேலும் மாப்பிள்ளை குடும்பத்திற்கு பஞ்சாபில் எட்டு மெடிக்கல் டெஸ்ட் லேப்கள் உள்ளது. 65 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். ரம்யா திருமணம் ஆகி மருமகளாக முதல் முறை வீட்டுக்கு வரப் போகிறாள் என்றதும் மணமகனின் வீட்டார் தங்களுடைய பெட்ரூமையை மிகப் பெரிதாக மாற்றியுள்ளனர். மாமனார் ரம்யா மீது மிகவும் பாசமாக இருப்பாராம். மணமகன் வீட்டார் தங்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வரதட்சணை கேட்கவில்லை. பஞ்சாப் முறைப்படி பெண் வீட்டில் வரதட்சனை கேட்க கூடாதாம். மாப்பிள்ளை தான் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை லட்சத்தில் ஒரு பெரிய தொகையை கொடுத்து நகைகளை வாங்கிக்க சொன்னார்.

ரம்யா பாண்டியனுக்கு மாப்பிள்ளை கொடுத்த வரதட்சணை! கல்யாணத்துக்கு முன்னாடி  போட்ட கண்டிஷன்.. அம்மா ஓபன் | Actress Ramya Pandian's Mother Opens Up About  Dowry Paid for ...

அதனால் எங்களுக்கு திருமண செலவு என்று எதுவும் இல்லை. திருமணம் முடிந்ததும் ஒரு வாரம் பஞ்சாபில் உள்ள மாப்பிள்ளை வீட்டில் தான் இருந்தோம். முதல் நாள் அடுப்பு பற்ற வைத்து ரம்யா கேசரி செய்து கொடுத்ததும் அவருடைய மாமியார் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்தார். இருவரும் ஹனிமூன் செல்லும் போது கூட ரம்யாவுக்கு செலவுக்கு அவருடைய மாமியார் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார். பணத்தை மட்டுமல்ல குணத்தையும் காட்டுகிற குடும்பம் என்று ரம்யாவின் தாயார் சாந்தி பெருமிதத்தோடு இந்த தகவலை பகிர்ந்து உள்ளார்.