சினிமாவில் எப்படி பெண்களுக்கு தொல்லை இருக்கோ.. அது போல் அந்த துறையில் ஆண்களுக்கு – ஷகீலா பகிர்ந்த ஷாக் தகவல்!

By vinoth on சித்திரை 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார்.

அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின. ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.

   

மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

   

அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது. ஷகீலா அதன் பின்னர் பல துறை வித்தகர்களை சந்தித்து அவர்கள் அனுபவங்களையும், தன் துறை சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேஷன் துறையில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைப் பற்றி அவர் பேசியுள்ளார். அதில் “ஃபேஷன் துறைக்கு ஆசையாக வரும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த துறையில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் புதிதாக வரும் ஆண்களுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுப்பார்கள். சினிமாவில் எப்படி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறதோ அதுபோல ஃபேஷன் துறையில் ஆண்களுக்குக் கொடுக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.