ரஜினி மேல் கோபப்பட்ட கிரேஸி மோகன்… அப்படி என்ன செஞ்சார்?-பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

By vinoth on சித்திரை 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வசனங்களில் வார்த்தை விளையாட்டுகள் நடத்தி நகைச்சுவையை வரவைப்பவர் எழுத்தாளர் கிரேஸி மோகன். நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் கிரேஸி மோகன். 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைசில் கிரேசி, விடாத சிரிப்பு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் கிரேசி மோகன் வேலை பார்த்துள்ளார்.

கிரேசி மோகன் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நடத்தினார். அவர் சின்னத்திரை சீரியல்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். அதன் பின்னர்தான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார் கமல். அவர் எத்தனையோ படங்களில் பணியாற்றி இருந்தாலும் கமல்ஹாசனோடு அவர் இணையும் படங்கள் காமெடிக்கு 100 சதவீதம் கியாரண்டி.

   

அதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களே சாட்சி. இந்த படங்களின் வசனங்களை மட்டுமே தனியே கேட்டால் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருக்கும்

   

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவராக இருந்த கிரேஸி மோகன், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி மாரடைப்பால் கிரேசி மோகன் உயிரிழந்தார். இது தமிழ் சினிமா உலகுக்கு நிச்சயம் ஒரு இழப்புதான்.

 

கமல்ஹாசனுடன் எத்தனையோ படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’ என்ற ஒரே படத்தில்தான் பணியாற்றினார் கிரேஸி மோகன். அந்த படத்துக்காக சில மாதங்கள் இயக்குனர் சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால் அப்போது இருந்த அரசியல் அழுத்தங்களால் கொஞ்ச நாள் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தாராம் ரஜினி.

இதைக் கேட்ட கிரேஸி மோகன் காரில் செல்லும் போது “என்ன நெனச்சிட்டு இருக்காரு. ரெண்டு மாசம் கஷ்டப்பட்டு கதை எழுதினா சட்டுனு படம் பண்ணலன்னு சொல்லிட்டாரு. என்ன தான் நெனச்சிட்டு இருக்காரு’ எனக் கோபமாக கத்திவிட்டார்.” எனத் தெரிவித்ததாக சுந்தர் சி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். கிரேஸி மோகன் கோபப்பட்டு தான் அந்த ஒரு முறைதான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.