‘நான் யாரு தெரியுமா?… கூகுள்ல போய்த் தேடிப் பாருங்க’- ஷாருக் கான் பட வாய்ப்பை நிராகரித்த ஷகீலா!

By vinoth on சித்திரை 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார்.

அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின. ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.

   

மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது. ஷகீலா பல நேர்காணல்களில் தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் தன்னுடைய உறவினர்கள் ஏமாற்றிவிட்டனர் என சொல்லி இருக்கிறார்.

   

 

இந்நிலையில் ஷகீலா ஷாருக் கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதைத் தான் நிராகரித்தது பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் என்னை நடிக்கக் கேட்டார்கள். ஆனால் எனது கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்பதற்கு ஆடிஷன் கொடுக்க வேண்டும் என்றார்கள்.

எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் நான் ‘ஷாருக் கான் போல நானும் பிரபலமான நடிகைதான். என்னைப் பற்றி தெரியாது என்றால் கூகுளில் ஷகீலா மலையாளம் என்று தேடிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு வாய்ப்பை நிராகரித்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.