அஜித்தின் குட் பேட் அக்லி ஹிட்டா? பிளாப்பா?.. ஃபேன் பாயாக ஜெயித்தாரா ஆதிக்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்..!

By Nanthini on சித்திரை 10, 2025

Spread the love

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் அர்ஜுன் தாஸ் மற்றும் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அண்மையில் விளையாட இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Good Bad Ugly X Review in Tamil Ajith Kumar movie gets mixed review in social media

   

இப்படியான நிலையில் இன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் வெளிநாடுகளில் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் விமர்சனங்களை பரக்கவிட்டு வருகிறார்கள். அதன்படி படத்தின் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும் இன்டர்வல் காட்சி அட்டகாசமாக இருப்பதாகவும் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் மற்ற பார்வையாளர்களுக்கு பேடாக இருக்கும் எனவும் ஒருவர் கூறுகிறார்.

   

Good Bad Ugly trailer: Ajith Kumar brings mass back in Adhik Ravichandran's next - India Today

 

இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை திருப்திப்படுத்தும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் திருப்திகரமான ஒரு படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார். ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தின் மூலம் தரமான சம்பவத்தை செய்துள்ளார். படம் முழுக்கவே ஓவர் பில்டப் தான். கதையோ எமோஷனலோ இல்லை என்று பிரபல விமர்சகர் கிரிஸ்டோபர் கனகராஜ் தெரிவித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே ஒரு படத்தை அஜித்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார்.

 

முதல் பாதையை நன்றாக சென்றாலும் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் போஷன் மட்டும் அதற்குப் பின்னர் கிளைமாக்ஸ் வரை இழுத்துக் கொண்டே சென்று முடித்த விதம் படும் மொக்கை. இந்த படத்தில் கதையும் இல்லை எமோஷனல் கனெக்ட் டும் இல்லை என்று வெங்கி தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இந்த படம் சூப்பரான படமாக இல்லை என்றாலும் அஜித் நடிப்பில் சமீப காலமாக வந்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த திரைப்படம் சிறப்பாகவே அமைந்துள்ளது.

 

அஜித்துக்காக மற்ற படங்களின் ரெஃபரென்ஸ் காட்சிகள் தேவையில்லை. அவரே ஒரு ரெஃபரன்ஸ் டிப்போதான். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இன்னும் மூன்று படங்கள் கூட இப்படி சரவெடியாக கொடுக்கலாம். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித் பல வருடம் கழித்து ஒரு தரமான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். ஆக மொத்தத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு ட்விட்டரில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளது.