விஜய்யோட தீவிர ரசிகை நான்.. ஆனா எங்க அம்மா ஒரு சத்தியம் வாங்கிடாங்க.. நடிகை சோனா ஓபன் டாக்..!

By Nanthini on பங்குனி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான்.

கத்தியுடன் வீட்டில் இறங்கிய மர்மநபர்கள்: பயத்தில் ஓடிய நடிகை சோனா காயம்;  போலீஸ் விசாரணை!

   

தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார். அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

   

இயக்குநர் வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார் | இயக்குநர் வெங்கட் பிரபு  மீது நடிகை சோனா புகார் - hindutamil.in

 

இந்நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் அரசியலுக்கு வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் எப்போதுமே அரசியலில் அப்டேட் ஆக இருப்பேன். அரசியல் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எங்க அம்மா மரணம் படுக்கையில் இருக்கும்போது நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்று அவரிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். அவங்க வாழ்க்கையில கேட்டது இது ஒரு விஷயம் மட்டும்தான்.

Vijay Is The Real Men Says Glamour Actress Sona

அதனால நான் அரசியலுக்கு போகல. விஜய் உண்மையிலேயே நல்ல மனுஷன். அவருக்கு இதுவரைக்கும் நான் ஒரு ரசிகையாக இருந்தேன் இனி அரசியலுக்கு நான் ரசிகையாக இருப்பேன். 65 வயசுலையும் விஜய் கிட்ட என்ன பத்தி கேட்டா அவர் வெட்கப்பட தான் செய்வாரு. உண்மையிலேயே விஜயை எனக்கு அந்த அளவுக்கு பிடிக்கும் என்று சோனா பேசியுள்ளார்.