முடியாத நிலையிலும் ரஜினிக்காக விசில் அடித்தே இளையராஜா உருவாக்கிய பாடல்.. இன்றும் ரசிகர்களின் காதில் ஒலிக்கும் எவர்கிரீன் சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா..?

By Nanthini on பங்குனி 23, 2025

Spread the love

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் இசைஞானி இளையராஜா. அவருடைய இசையில் உருவான பாடல்கள் இன்றளவும் மக்களுக்கு ஒரு மருந்தாக இருந்து வருகின்றது. சோகம், சந்தோசம் மற்றும் காதல் என அனைத்து எமோஷன்களுக்கும் ஏற்ற ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அவர் அதிக அளவில் இசையமைத்த ஹீரோக்கள் என்றால் அது ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் தான். அப்படி ரஜினிக்காக இளையராஜா இசையமைத்த ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.

இளையராஜா 47 ஆண்டுகள் | கோட்டையில்லை, கொடியுமில்லை எப்பவும் ராஜா | 47 Years  of Ilaiyaraaja - hindutamil.in

   

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மாதவி நடிப்பில் உருவான திரைப்படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. இந்த திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்து இருந்த நிலையில் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் படமாக்கப்பட்ட போது அனைத்து காட்சிகளின் படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருந்துள்ளது.

   

இளையராஜாவுக்கு நோ சொன்ன படக்குழு..! பிடிவாதமாக நின்று சாதித்து காட்டிய பஞ்சு  அருணாச்சலம்.. எந்த படம் தெரியுமா?

 

இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் காத்திருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் இளையராஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்துள்ளது. ஆப்ரேஷனுக்கு பிறகு அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருந்த நிலையில் அந்த சமயத்தில் இளையராஜாவை பார்த்து நலம் விசாரிக்கச் சென்ற பஞ்சு அருணாச்சலம் பாடல்களுக்காக ரஜினிகாந்த் உள்ளிட்டா பட குழுவினர் காத்திருக்கும் விஷயத்தை கூறியுள்ளார்.

தம்பிக்கு எந்த ஊரு – 39 ஆண்டுகள்! - மின்னம்பலம்

தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவருக்காக பாட வேண்டும் என்று முடிவு செய்த இளையராஜா நான் விசில் அடிக்க நீங்கள் பாடல் வரிகளை எழுதுகிறீர்களா என்று கேட்டதும் பஞ்சு அருணாச்சலமும் சம்மதம் தெரிவித்துள்ளார். இளையராஜா விசில் அடித்த டியூன் போட்ட நிலையில் பாடல் உருவானது. அந்தப் பாடல் தான் தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் இடம் பெற்ற காதலின் தீபம் ஒன்று பாடல். இளையராஜா ஆடியோ மற்றும் பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் வரிகள் மட்டுமல்லாமல் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் குரலும் அந்த பாடலுக்கு உயிர் கொடுத்தது. இந்த தகவலை இளையராஜா ஒரு மேடை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.