கோலாகலமாக நடந்து முடிந்த ஷாரிக் மனைவி மரியாவின் வளைகாப்பு விழா.. வைரலாகும் அழகிய வீடியோ!

By Nanthini on பங்குனி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் தான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Bigg Boss Shariq Hassan Wife Mariya Pregnant | ஷாரிக் மரியா

   

இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இவர் பென்சில், டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போதும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

   

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவிக்கு லிப் கிஸ்.. பிக்பாஸ் ஷாரிக்  புகைப்படங்கள் வைரல்..! - தமிழ் News - IndiaGlitz.com

 

இந்த நிலையில் ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் காதலை பெற்றோரிடம் சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மனைவியுடன் இணைந்து குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் ஷாரிக்.. குவியும்  வாழ்த்துக்கள்

சாரிக்  திருமணம் செய்துள்ள மரியா ஜெனிஃபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அதனை அறிந்து தான் ஷாரிக் மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த குழந்தையையும் தற்போது தங்களுடன் தான் வைத்து பார்த்துக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களே  ஆன நிலையில் தற்போது மரியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தற்போது மரியாவுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Angel Antonette Keziah பதிவைப் பகிர்ந்துள்ளார் (@makeup_by_kez)