தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர் திடீரென கவர்ச்சிப் பாதைக்குத் தாவினார்.
இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். இடையில் பாடகர் எஸ் பி பி சரண், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக இவர் புகார் அளிக்க தமிழ் சினிமா உலகில் பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது. அதன் பின்னர் அந்த பிரச்சனை அடங்க, சோனாவும் ஒரு கட்டத்தில் காணாமல் போனார்.
இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து ‘ஸ்மோக்’ என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். அது சம்மந்தமாக சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார். அதில் தான் ஏன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானேன் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதில் “நான் கிளாமர் வேடங்கள் பண்ணத் தொடங்கிய போதுதான் குடிக்க ஆரம்பித்தேன். பாடல்களில் கிளாமர் உடையில் நடனமாடும் போது கஷ்டமாக இருக்கும். அதை நினைத்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுவேன். அதனால் டான்ஸ் மாஸ்டர் திட்டுவார். அதனால் அந்த கூச்சவுணர்வு போக வேண்டும் என்பதற்காக டான்ஸ் மாஸ்டரிடம் பர்மிஷன் கேட்டு குடிக்க ஆரம்பித்தேன். குடித்தால் அந்த கான்ஷியஸ் இல்லாமல் நடனமாட முடிந்தது. அப்படிதான் குடிக்க ஆரம்பித்தேன். இடையில் சில பிரச்சனைகளில் மாட்டியபோதுதான் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தேன். இப்போது குடியை முழுவதும் நிறுத்திவிட்டேன். அதனால் என் உடலும் பழைய நிலைக்கு வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.
