காதலிக்க நேரமில்லை படத்தில் பொய் சொல்லி நடிக்கவைத்தார்கள்… முதுபெரும் நடிகை சச்சு பகிர்ந்த சம்பவம்!

By vinoth on பங்குனி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே சாதித்து சினிமா உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஸ்ரீதர். 1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.

இப்படி பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய ஸ்ரீதர் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் தானே இயக்குனர் ஆனார். அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.

   

   

ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இன்றளவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று ‘காதலிக்க நேரமில்லை’. இந்த படத்தில்தான் நாகேஷுக்கு ஜோடியாக குமாரி சச்சு நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். அதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 

இதனால் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வேடத்தில் நடிக்க சச்சு மற்றும் அவர் குடும்பத்தினர் தயங்கியுள்ளனர். ஏனென்றால் நகைச்சுவை வேடத்தில் நடித்துவிட்டால் பின்னர் கதாநாயகி நடிகையாக ஆக முடியாது என்பதால் தயங்கினார்களாம். ஆனால் ஸ்ரீதரின் எழுத்தாளர் கோபு “இதுவும் ஒரு கதாநாயகி வேடம்தான். நாகேஷுக்கு ஜோடி. இந்த கதாபாத்திரத்துக்கும் பாட்டு எல்லாம் உண்டு. அதனால் இந்த படத்தில் மூன்றாவது கதாநாயகி நீதான்” என சொல்லி ஏமாற்றி நடிக்க வைத்தாராம். இதை சச்சு ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.