கோபப்பட்ட கதாநாயகனை சாந்தப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சி.. தன் பொறுமையால் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இயக்குனர் பீம்சிங் செய்த செயல்..!

By Nanthini on பங்குனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்தான் பீம்சிங். கோலிவுட் சினிமாவின் அக்கால நடிகர்களின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதினார். சில படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் அதனை தயாரிக்கவும் செய்தார். இவர் தன்னுடைய உயர்நிலைப் படிப்பை முடித்த கையோடு ஆந்திர பிரபா என்ற தெலுங்கு பத்திரிக்கையில் சிறிது காலம் துணையாசிரியராக பணியாற்றினார் அதன் பிறகு சோனா பாய் என்பவரை பீம்சிங் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மனைவியின் சகோதரரும் தன்னுடைய மைத்துனரின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்தார்.

   

ஆரம்ப காலகட்டத்தில் பஞ்சு கிருஷ்ணன் இயக்குனர்கள் குழுவில் உதவி இயக்குனராக பணியாற்றினார். எடிட்டிங் துறையிலும் சிறந்து விளங்கினார். ஒரு படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா, பீம்சிங் திரைப்படம் போல இருக்கணும் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு படங்களை எடுக்க ஆரம்பித்தார். உறவுகளுக்கு உயிர் ஊட்டி திரைகளில் உலாவ விட்டவர் பீம்சிங். இவருடைய திரைப்படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும் படங்களாகத்தான் இருக்கும். 1954 ஆம் ஆண்டு அம்மையப்பன் என்ற திரைப்படத்தை பீம்சிங் இயக்கிய நிலையில் இந்தத் திரைப்படம் தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம். முதல் படம் வெற்றி பெற விட்டாலும் துவண்டு போகாத பீம்சிங் அடுத்தடுத்த படங்களை கொடுத்து சினிமாவில் தன்னை ஒரு இயக்குனராக நிலை நிறுத்தினார்.

   

 

இப்படியான நிலையில் பீம் சிங் படப்பிடிப்பில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பிரபலமான கதாநாயகன் நடித்த படத்தை அப்போது பீம்சிங் இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகன் காட்டில் நடந்து செல்வது போல ஒரு காட்சி அமைந்திருந்தது. அப்போது தயாரிப்பாளர் இந்த காட்சிக்கு காட்டில் எல்லாம் அனுமதி வாங்காமல் படபிடிப்பு நடந்து கொண்டு இருந்த இடத்தில் சில மரங்கள் இருந்தது, அங்கேயே இந்த காட்சியை படமாக்கி விடுங்கள் என்று இயக்குனர் பீம் சிங்கிடம் கூறியுள்ளார். பெரும்பாலும் பீம்சிங் தயாரிப்பாளர்களை அனுசரித்து போகக் கூடியவர்.

remembering A. Bhimsingh on his memorial day | for jan 16 ////A. Bhimsingh  | 'உறவுகளுக்கு உயிரூட்டி, திரைகளில் உலாவ விட்டவர் ' - இயக்குநர் பீம்சிங்  நினைவுதினம் இன்று !

அவர் சொன்ன வார்த்தைக்கு மறுபெயர்ச்சி பேசாமல் கிளம்பிவிட்டார். மறுநாள் பீம்சிங் படப்பிடிப்புக்கு வரவில்லை. காலையில் சூட்டிங் வந்த கதாநாயகன் தான் காட்டில் நடந்து போவதாக சொல்லப்பட்ட காட்சி சாதாரண மரங்கள் இருக்கும் இடத்தில் படமாக்கப்படுவதை அறிந்து கோபப்பட்டார். உடனே அங்கிருந்த உதவி இயக்குனர்களிடம் இதுதான் காடா முன்ன பின்ன நீங்க காட்டை பார்த்திருக்கீங்களா இங்க எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி கோபப்பட்டார். அதன் பிறகு திரும்பி பார்த்தபோது பின்னால் இவர் பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டு பீம்சிங் நின்று கொண்டிருந்தார்.

மதியின் திரை நட்சத்திரங்கள்: இயக்குநர் ஏ. பீம்சிங் பிறந்த தினம் அக்டோபர்  15, 1924 .

அப்போது சற்று தனது சத்தத்தை குறைத்த கதாநாயகன் கோபத்துடன் இங்கதான் ஷூட்டிங் எடுக்க போறீங்களா நான் போய் மேக்கப் போட்டு வரட்டுமா என்று கேட்டதும் பீம்சிங் ஆமா என்று சொன்னார். உடனே ஹீரோ வந்து அந்த இடத்தில் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த காட்சியை அனைவரும் போட்டுப் பார்த்தனர். அதில் ஒரு அடர்ந்த காட்டில் எப்படி படப்பிடிப்பு எடுத்தால் இருக்குமோ அந்த அளவிற்கு காட்சி இருந்துள்ளது. அதனை கண்டு வியந்து போன கதாநாயகன் பீம் சிங்கிடம் சென்று மன்னிப்பு கேட்டார். பொறுத்தார் பூமியாள்வார் என்பதற்கு பீம்சிங் தான் சிறந்த உதாரணம்.