என் கல்யாண ரிஷப்ஷனில் அவரை மிரட்டினார் எம் ஜி ஆர்… நளினி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

By vinoth on பங்குனி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராமராஜன் அவர் உதவி இயக்குனராக பணியாற்றிய படங்களில் கதாநாயகியாக நடித்த நளினியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதலில் இவர்கள் திருமணத்துக்கு நளினி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் ஓடிப்போய்தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ராமராஜன் மேல் தனக்கு எப்படிக் காதல் பிறந்தது என்பதைக் கூறியுள்ளார்.

   

அதில் “அவர் என் மேல் ஒருதலைக் காதலில் இருந்தார். அந்த விஷயம் எங்கள் வீட்டில் தெரிந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு அவரை அழைத்துச்சென்று அடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நமக்காக ஒருவர் அடிவாங்கி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் நாம் பழிவாங்க வேண்டும். இவரைதான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

   

 

இதனால் அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்று திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒருமாதம் சென்னைக்கு வெளியிலேயே சுற்றியுள்ளனர். பின்னர் ஒருவழியாக யார் யார் மூலமாக வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவர்களும் மனமிறங்கி அவர்களை ஏற்றுக்கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வைத்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம் ஜி ஆர் ராமராஜனை மிரட்டியதாக கூறியுள்ளார் நளினி. இதுபற்றி பேசியுள்ள அவர் “ராணி (நளினி) ரொம்ப நல்ல பொண்ணு. இவ்வளவு சின்ன வயசுல அவ கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது. அவ இன்னும் நல்லா சாதித்திருச்சுக்கணும். பரவால்ல.. அவள நல்லா பாத்துக்கணும். இல்லன்னா என் தோட்டத்துல் ஒரு செடி மொளச்சிடும் பாத்துக்கோ’ என மிரட்டினார். அந்த அளவுக்கு அவருக்கு என் மேல் பாசம்” எனக் கூறியுள்ளார் நளினி.