இந்திய நடிகைகளில் பேரழகியாக இன்று வரை கொண்டாடப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் மறைந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்றுவரை அவரை நிறைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் ஸ்ரீதேவியை சுற்றி நிறைய சர்ச்சைகளும் இருக்கின்றன. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வந்த காலத்தில் ஸ்ரீதேவி தான் அவர்களுடைய ஆஸ்தான கதாநாயகி. ஸ்ரீதேவி நடித்தாலே நம்ம படம் ஹிட் அடித்து விடும் என்று சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் கண்ணை மூடிக்கொண்டு நம்பி இருந்தார்கள். அந்த அளவுக்கு ராசியான நடிகையாக இருந்தார்.
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் கமல் மற்றும் ஸ்ரீதேவி. பல திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கமல் முதல் முதலாக ஸ்ரீதேவியை மூன்று முடிச்சு திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் சந்தித்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் பல திரைப்படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தாலும் தன்னுடைய அபார நடிப்பால் கமலை வியக்க வைத்த திரைப்படம் என்றால் ஸ்ரீதேவி நடித்த மீண்டும் கோகிலா திரைப்படம் தான். கமல்ஹாசனுக்கு மிகவும் விருப்பமான நடிகைகள் என்றால் அது பத்மினி மற்றும் சாவித்திரி ஆகியோர்தான்.

இவர்கள் இருவருக்குமே கமல்ஹாசன் தீவிர ரசிகராக இருந்தார். இவர்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஒரு நடிகைக்கு தீவிர ரசிகனாக மாறியது என்றால் அது ஸ்ரீதேவிக்கு தான். தமிழ் சினிமாவில் தான் விரும்பும் அளவுக்கு எந்த ஒரு நடிகையும் இந்த காலகட்டத்தில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தபோது ஸ்ரீதேவியின் நடிப்பு தன்னை வியக்க வைத்ததாக கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் கோகிலா திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு என்னை வியக்க வைத்தது. அதன் பிறகு தான் அவருக்கு நான் தீவிர ரசிகனாக மாறினேன் என்று கமல்ஹாசன் ஸ்ரீதேவியை பற்றி பலமுறை புகழ்ந்து பேசி உள்ளார்.